இந்தியா

மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு: அரசின் அதிரடி அதிரடி!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

ஆனால் தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது என்பதும் தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் கல்விகள் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அது மட்டும் இன்றி அம்மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி வந்த கேரள அரசு இந்த வாரமும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு என அதிரடியாக அறிவித்தது. இதனால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது அதேபோல் ஜிகா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version