இந்தியா

Kerala – இறுதி நிலவரம் என்ன..?- யாருக்கு எத்தனை தொகுதிகள்..??

Published

on

கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 140 இடங்களில் சுமார் 97 இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கூட்டணி சுமார் 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் இந்த முறை தேர்தலிலும் கேரள மாநிலத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 44 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 14 இடங்களில் சிபிஎம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இரண்டு இடங்களில் ஜெயித்து விட்டது.

மூன்றாவது இடத்தில் சிபிஐ கட்சி உள்ளது. அந்தக் கட்சி 14 இடங்களில் முன்னிலைப் பெற்று ஒரு இடத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version