இந்தியா

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. பீதியில் மக்கள்!

Published

on

கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலமாகக் கேரளா உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் ஓணம் பண்டிகைக்காகச் செய்யப்பட்ட ஊரடங்கு தளர்வு, செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள், டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் போன்றவை கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.

தற்போது கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு 8 லட்சத்து 94 ஆயிரம் நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. சிகிச்சையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், உடனே அதைக் குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்றக் கண்டுபிடிக்க antigen என்ற முறை பயன்படுத்துவதும் பரவல் அதிகமாக இருக்கக் காரணங்கள் என்று கூறுகின்றன. இந்த antigen முறையில் 50 சதவீதம் மட்டுமே தொற்றுக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனைக்கு வந்தவர்களின் முடிவு இல்லை என்று வந்த பிறகு, வீடு திரும்பியவர்கள் மூலம் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா போல ஆர்.டி.சி.பி.ஆர் பரிசோதனையைப் பயன்படுத்தக் கேரளா சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் தமிழகத்திலிருந்து ஆயிரம் கணக்கானவர்கள் கேரளா சென்று வருகின்றனர். எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் கொரோனா மட்டுமல்லாமல் பறவைக் காய்ச்சல் பாதிப்பும் உள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version