இந்தியா

ரூ.2300 கோடி ஐபிஓ.. திடீரென பின்வாங்கிய ஜோயாலுக்காஸ்.. என்ன காரணம்?

Published

on

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் என்ற நிறுவனம் ரூ.2300 கோடி ஐபிஓ தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை தலைமை இடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் சுமார் 60 ஜோயாலுக்காஸ் கிளைகள் இயங்கி வருவதாகவும் இந்தியா மட்டும்ின்றி, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

joalukkas

அமெரிக்கா, சீனா மற்றும் இந்திய ஆகிய மூன்று நாடுகளில் தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதை அடுத்து தனது பிசினஸை இந்தியாவில் விரிவு படுத்துவதற்காக 2300 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐபிஓ விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பம் செபியின் பரிசீலனையில் உள்ள நிலையில் திடீரென தற்போது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐபிஓவை திரும்ப பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்தியாவின் முன்னணி நகையை நிறுவனமான ஜோயாலுக்காஸ் ஐபிஓவை திரும்ப பெற்றுக் கொண்டது நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 ஆம் ஆண்டில், கல்யாண் ஜூவல்லர்ஸ் ஐபிஓ மூலம் ரூ.1,175 கோடியை திரட்டியது. அதேபோல் டாடா குழுமத்தின் டைட்டன், இந்திய நகைத் துறையில், 2.4 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன், மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் கடும் போட்டியிலும் ஜோயாலுக்காஸ் நிறுவனம் 2021 நிதியாண்டில் ரூ.8,066 கோடி வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version