இந்தியா

விஜய், பிரபாஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: கேரள நடிகர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

Published

on

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் சின்னாபின்னமானது. இதனையடுத்து கேரளாவை மீட்டெடுக்க பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். இதில் திரை பிரபலங்கள் பலரும் நிதி அளித்தனர். ஆனால் மற்றவர்களை விட கேரள நடிகர்கள் குறைவாக நிதி அளித்தது தொடர்பாக கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் 1 கோடி ரூபாய், தமிழ் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் 1 கோடி ரூபாய், விஜய் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு முதல் பணமாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கொடுத்தார்கள். ஆனால், மலையாள நடிகர்கள் மிகக்குறைவாகவே நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

நடிகர் மோகன்லால் 25 லட்சம் ரூபாய், நடிகர்கள் மம்மூட்டி மற்றும் அவரது மகன் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். நடிகர்கள் பலர் களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டதை பாரட்டியே ஆக வேண்டும். ஆனாலும் அண்டை மாநில நடிகர்கள் அளவுக்கு இவர்கள் நிதியுதவி அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். மலையாள நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன்.

seithichurul

Trending

Exit mobile version