சினிமா

சீனாவில் வெளியாகிறது சுசீந்திரனின் கென்னடி கிளப்!

Published

on

பெண்கள் கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள கென்னடி கிளப் படம் சீனாவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து கென்னடி கிளப் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா, சூரி, முனிஷ்காந்த், புதுவரவு மீனாட்சி, காயத்ரி, நீது செளம்யா, ஸ்மிரிதி, செளந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சீன டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version