சினிமா செய்திகள்

பிரம்மாண்ட புராண படத்தில் சீதை ஆக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! ராமர் ஆக யார்..?

Published

on

பிரம்மாண்ட புராண படம் ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் அதிபுருஷ். இந்தப் படத்தில் ராமர் ஆக நடிகர் பிரபாஸ் நடிக்கிறார். பிரபாஸ்-க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். முக்கியமாக ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சயீஃப் அலி கான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த அதிபுருஷ் படத்தை தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றொரு பிரம்மாண்ட பட்ஜெட் படமான ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version