சினிமா செய்திகள்

எப்படி இருந்த கீர்த்தி சுரேஷ்.. இப்படி ஆயிட்டாரே!

Published

on

தென்னிந்திய மொழி படங்களில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

நடிகையர் திலகம் படத்தின் மூலம் நான் டூயட் பாடும் நாயகி மட்டுமல்ல மகா நடிகை என நிரூபித்தார். தற்போது, போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில், கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்து இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் இந்த ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் படங்களை தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படமொன்றில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்த டெடிகேஷனை பார்த்து ஆல் இந்திய சினிமா உலகமும் மிரண்டு போயுள்ளது.

Trending

Exit mobile version