சினிமா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா? – கசிந்த செய்தி…

Published

on

விஜயின் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. டுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அந்தப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: நல்லவேளை தப்பித்தேன்!… அறுவை சிகிசைக்கு பின் நடிகர் சித்தார்த் பதிவு…

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்களாம். அதில் கண்டிப்பாக கீர்த்தி சுரேஷ் ஒருவர் எனவும், மற்றொரு கதாநாயகி அனேகமாக கியாரா அத்வானி அல்லது ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version