சினிமா செய்திகள்

’அஜித் 62’ படத்தில் இரண்டு நாயகிகளா? ஒருவர்நயன் தாரா, இன்னொருவர் இவரா?

Published

on

அஜித் நடிக்கவிருக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அவருடைய 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்றும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றும் அவர்களில் ஒருவர்தான் நயன்தாரா என்றும் இன்னொருவர் பிரபல நடிகை என்றும் கூறப்படுகிறது. அந்த இன்னொரு நடிகை கீர்த்தி சுரேஷ் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 61’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க முயற்சி செய்தார் என்றும் ஆனால் அந்தப் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சோர்ந்துபோய் இருந்த நிலையில் தற்போது அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் உற்சாகமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version