சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கமீட் ஆன கீர்த்தி சுரேஷ்!

Published

on

ஜிகர்தண்டா, பேட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் இயக்கவுள்ள இந்த படம், ஹீரோயின் செண்ட்ரிக் படமாக உருவாவதாலும், கதை பிடித்துப் போனதாலும், சர்கார் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் கமீட் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அஜய்தேவ்கனுடன் பாலிவுட்டில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அந்த படத்தை தொடர்ந்து தமிழில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version