சினிமா

கீர்த்திச் சுரேஷ் மலையாள நடிகர் மோகன் லாலுடன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Published

on

முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்திச் சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்துப் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவதாக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பலரும் எதிர்பாராத வகையில் மலையாள நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். கீர்த்திச் சுரேஷ் அறிமுகமானதே பிரியதர்‌ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில் தான். அதனை அடுத்து இப்படத்தில் தான் மோகன்லால் – பிரியதர்‌ஷன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்.

இந்தப் படத்தில் மோகன் லாலின் இளவயது கதாப்பாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். இது மிகப் பெரிய பட்ஜெடில் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது.

தன்னை அறிமுகப்படுத்திய கூட்டணி என்பதால் நன்றிக்கடனுக்காக 5 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கக் கீர்த்திச் சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version