தமிழ்நாடு

பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்: என்ன காரணம்?

Published

on

பாமக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் அந்த 23 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒருசில வேட்பாளர்களுக்கு கட்சியில் உள்ள தொண்டர்களே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புத்ய வேட்பாளரை அறிவித்து ஜிகே மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வேட்பாளராக போட்டியிடுவார் என மருத்துவர் அய்யா மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் உடன் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version