தமிழ்நாடு

தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு: எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது எப்போது?

Published

on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது என்பதும் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பதவியேற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தற்காலிக சபாநாயகர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ பிச்சாண்டி என்பவர் தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திங்கள் காலையில் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். மேலும் செவ்வாய் அன்று மற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மே 11-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்றும், புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் அன்றைய தினம் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மே 12ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version