சினிமா

கேதார்நாத் டீஸர் ரிலீஸ்!

Published

on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இடம்பிடித்துள்ளது.

 

தோனி பயோபிக் படத்தின் மூலம் பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கேதார்நாத் படம் உருவாகியுள்ளது. அபிஷேக் கபூர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தின் கூடுதல் மற்றும் முக்கியமான சிறப்பு என்னவென்றால், பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் சைஃப் அலி கானின் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கு பிறந்தவர். இவருக்கு 25வயது ஆகிறது. சைஃப் அலிகான் தற்போது கரீனா கபூருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு தைமூர் என்ற குட்டி பையன் உள்ளான்.

அறிமுக படம் என்றாலும், தனது தந்தையின் சினிமா வாரிசாகவே காட்சிக்கு காட்சி நடிப்பில் அசத்தியுள்ளார் சாரா அலி கான். அதுவும் முதல் படத்திலேயே அந்த லிப் லாக் சீன் அட்டகாசம். உங்களுக்கு பாலிவுட்டில் பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

சாரா. கேதார்நாத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version