சினிமா செய்திகள்

கழுகு 2 ஹிட்டா? ஃபிளாப்பா?

Published

on

சத்ய சிவா இயக்கத்தில் வெளியான கழுகு படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றியை மீண்டும் ருசிக்க நினைத்த சத்ய சிவாவுக்கு கழுகு 2 வெற்றியை கொடுத்ததா? இல்லை ஏமாற்றியுள்ளதா என்பதை இந்த விமர்சனத்தில் காண்போம்..

முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அதே மையக்கருவை நோக்கி இந்த படமும் நகர்கிறது. கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட், எம்.எஸ். பாஸ்கர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

செந்நாய் கூட்டம் உலவும் காட்டை ஏலத்துக்கு வாங்கிய ஒருவர், அந்த காட்டிற்கு வேலைக்கு ஆட்கள் வரவேண்டும் என நினைத்து திருடர்களான கிருஷ்ணாவையும், காளி வெங்கட்டையும் வேட்டைக்காரர்கள் என நினைத்து வேலைக்கு வைக்கின்றார்.

திருடர்களுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் அவர்களும் அந்த வேலையில் உள்ள வில்லங்கம் புரியாமல் வேலைக்கு சேர்ந்து விடுகின்றனர்.

ஆனால், செந்நாய் குறித்த பில்டப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கழுகு 2 சில சீன்களூக்கு பிறகு பிந்துமாதவிக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்படும் காதல் போராட்டமாக மாறி விடுகிறது.
படத்தின் கதை அப்படியே கும்கி படத்தை நினைவு படுத்துவது போன்று இருந்தாலும், திரைக்கதையில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் படம் சப்புன்னு இருக்கிறது.

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் கழுகு படத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா நல்ல மெலோடிகளை கொடுத்திருந்தாலும் தியேட்டரில் தூக்கம் தான் வருகிறது.

கிளைமேக்ஸ் தான் படத்தின் அடிநாதம் என்ற போதும் அது ஏதோ திணிக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. படத்திற்கு அந்த கிளைமேக்ஸ் கொஞ்சமும் ஒட்டாமல் தனித்திருப்பது பலவீனமாகவே பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில் கழுகு நடத்திய வசூல் வேட்டையில் பாதியை கூட இந்த கழுகு 2 நடத்தாது.

சினிமா ரேட்டிங்: 1.75/5.

seithichurul

Trending

Exit mobile version