சினிமா செய்திகள்

நடிகை ‘கயல்’ ஆனந்தி திடீரென ரகசிய திருமணம்..!

Published

on

கயல் படத்தின் மூலமாகப் புகழ் பெற்ற நடிகை கயல் ஆனந்தி இன்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கயல் ஆனந்தியின் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் இன்று அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மாப்பிள்ளையின் பெயர் சாக்ரடீஸ் எனத் தெரிகிறது. குடும்பத்தார் பார்த்து முடித்த திருமணம் என்பதால் மிகவும் நெருங்கிய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.

தெலங்கானாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் சினிமா துறையைச் சார்ந்த யாரும் திருமணத்துக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

சமீபத்தில் தான் கயல் ஆனந்தி மீண்டும் தனது ‘பரியேறும் பெருமாள்’ நாயகன் கதிர் உடன் மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலுங்குவில் நடிகர் பிரபாஸ் உடன் ஜாம்பி ரெட்டி, சுதிர் பாபு உடன் ஒரு படம், நடிகர் சாந்தனு உடன் ராவண கோட்டம் ஆகிய படங்களிலும் ஆனந்தி நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version