சினிமா செய்திகள்

நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்? எப்படி இருக்கும் இந்த ஜோடி?

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ஓடிடியில் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நயன்தாரா, ஷாருக்கானுடன் ‘லயன்’ உள்பட இன்னும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனம் கூழாங்கல் உள்பட ஒரு சில திரைப்படங்கள் தயாரித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நயன்தாரா அந்த படத்தில் ஒரு சிறப்பு கேரக்டரில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது

சமீபத்தில் கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை அடுத்து கவின் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version