சினிமா செய்திகள்

ஓடிடியா? தியேட்டரா? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கவின் படக்குழு!

Published

on

நடிகர் கவின் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதும், ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ’லிப்ட்’ திரைப்படத்தை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் திரையரங்குகள் திறந்து விட்டதால் சில நாட்கள் பொறுத்திருந்து திரையரங்குகளில் தான் ’லிப்ட்’ படத்தை ரிலீஸ் செய்வோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்திற்கும், ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திம் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்பதும் இரு நிறுவனங்களும் ஊடகங்கள் மூலம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று ஹாட்ஸ்டார் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தவிர ரசிகர்கள் ஒரு வழியாக நிம்மதி அடைந்துள்ளனர்.

கவின் ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ள இந்த படம் ஐடி அலுவலகம் ஒன்றில் நடக்கும் த்ரில் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வினித் வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version