தமிழ்நாடு

ரஜினிகாந்த் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினாலும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்யும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீர் அமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ரஜினிகாந்த் உடல் நலத்துடன் உள்ளார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version