சினிமா செய்திகள்

வரலட்சுமி, வைபவ் மிரட்டும் ‘காட்டேரி’ ட்ரெய்லர்-2..!

Published

on

நடிகர்கள் வைபவ், வரலட்சுமி நடிப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த பேய் படமாக ‘காட்டேரி’ வெளியாக உள்ளது.

காட்டேரி திரைப்படத்தில் 2-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் 2-ம் ட்ரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். வைபவ், வரலட்சுமி, கருணாகரன், ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டிகே இத்திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். ஓடிடி வெளியீடாக இல்லாமல் நேரடியாகத் திரை அரங்குகளில் படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் கே ஈ ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version