சினிமா செய்திகள்
சீனியர் நடிகர் செல்லத்துரை காலமானார். திரையுலகினர் இரங்கல்
தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரான செல்லத்துரை அவர்கள் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84.
விஜய் நடித்த கத்தி படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் ஒருவராக செல்லத்துரை அவர்கள் நடித்திருந்தார். அதேபோல் விஜய் நடித்த தெறி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த செல்லத்துரை அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு தனது இல்லத்தில் காலமானார்.
மறைந்த செல்லத்துரை அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ஏற்கனவே கேவி ஆனந்த் அவர்கள் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது செல்லத்துரை அவர்களின் மறைவு மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவேக், தாமிரா, கேவி ஆனந்த், செல்லத்துரை, என அடுத்தடுத்து திரையுலக பிரபலங்கள் மறைந்து கொண்டிருப்பது திரையுலகிற்கு போதாத காலம் என்றுதான் கூறவேண்டும்.