சினிமா

ராமேஸ்வரம் போனாலும் விடாது போலருக்கே: மீரா மிதுனுடன் செல்ஃபி எடுத்த கஸ்தூரி!

Published

on

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் பிரபல நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இந்நிலையில் தற்போது பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி வைல்டு கார்ட் எண்ட்ரியாக நுழைவார் என கூறப்பட்டு வருகிறது.

வைல்டு கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என கூறப்படும் நிலையில் அவரை ராமேஸ்வரம் வரை சென்று சந்தித்துள்ளார் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுன். இதனையடுத்து கஸ்தூரி மீரா மிதுனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மீரா மிதுனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட கஸ்தூரி அதனை டுவிட்டரில் பதிவேற்றி, நான் இன்று யாரை சந்தித்திருக்கிறேன் என பாருங்கள்! ராமேஸ்வரம் போனாலும்.. இந்த பிக்பாஸ் விடாது போலருக்கே! என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைவார் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version