சினிமா செய்திகள்

படத்தின் தரத்திற்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை: ‘பீஸ்ட்’ படத்தை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி

Published

on

ஒரு படத்தின் வெற்றிக்கும் தரத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் வெற்றி பெறும் பலன்கள் எல்லாம் தரமான படங்கள் இல்லை என்றும் ‘பீஸ்ட்’ படத்தை வறுத்து எடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி .

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘நான் விஜய்யின் தீவிர ரசிகை. விஜய் படம் என்றால் நான்கு முறை பார்ப்பேன். ‘பீஸ்ட்’ படமும் எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்கக்கூடாது. பொது மக்கள் விரும்பும் வகையில் படம் எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் தமிழ் படம் தான் இந்திய அளவில் ரீமேக் ஆனது, ஆனால் தற்போது பான் இந்தியா திரைப்படங்கள் முன் தமிழ் திரைப்படம் தரமற்றதாக இருக்கிறது. ஒரு படத்தின் பட்ஜெட்டிற்கும் தரத்திற்கும் சம்பந்தமில்லை. அதேபோல் ஒரு படத்தின் வெற்றிக்கும் தரத்திற்கும் கூட சம்பந்தம் இல்லை.

வெறும் ரசிகர்களுக்காகவும் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பர யுக்திக்காகவும் படம் எடுத்தால் தமிழ் சினிமா வளராது. பொதுமக்களுக்காக படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். ‘பீஸ்ட்’ படம் குறித்து நடிகை கஸ்தூரி கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version