இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

Published

on

370 சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. இதனையடுத்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. மாலங்களவையில் கடுமையான அமளி நிலவியது. இதனையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்த சூழலில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அமைதி மற்றும் பொது நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் விடுதிகளில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். உள்நாட்டு அமைதியைக் காக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புப் படைகள் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புக்களைப் பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version