இந்தியா

காங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி!

Published

on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் தேர்தலின்போது வாக்கு கேட்டு வரும் காங்கிரஸ் தலைவர்கள் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை எதிர்த்துப் பேசினால், மக்கள் செருப்பைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். காஷ்மீர் விஷயத்தில் இதுவரை காங்கிரஸ் எந்தவித தெளிவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. வாக்கு கேட்டு வரும்போது மக்கள் அவர்களை அருகில் அழைத்து ஷூவால் அடிப்பார்கள்.

ராகுல் காந்தி அரசியலில் ஒரு குழந்தை போல நடந்து கொள்வதால்தான், அவரது பெயரை பாகிஸ்தான் ஐநாவுக்கு அளித்த அறிக்கையில் சேர்த்துக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை. அவர் ஒரு மரியாதையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார் என கூறினார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பேசக்கூடிய பேச்சா இது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version