இந்தியா

காஷ்மீர் தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதி அதில் அகமது வெளியிட்ட காணொளி!

Published

on

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை சேர்ந்த அதில் அகமது என்ற நபர் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடந்த பகுதிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அதில் அகமது தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் குந்திபார்க் கிராமத்தைச் சேர்ந்தவர். 22 வயதான அதில் அகமது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்துள்ளார்.

பயங்கரவாதி அதில் அகமதுவின் புகைப்படமும், தக்குதலுக்கு முன்னர் பேசிய காணொளியும் சமூக வலைதளங்களில் தற்போது வரைலாக பரவி வருகிறது. அந்த காணொளியில், என் பெயர் அதில் அகமது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்தேன். ஒரு வருடம் காத்திருந்த பிறகு நான் எதற்காக ஜெய்ஷில் இணைந்தேனோ அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தக் காணொளி உங்களை வந்தடையும்போது நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி.

காஷ்மீரிகள் கடைசி யுத்தத்துக்கு தயாராகி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைய வெண்டும். என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் இஸ்லாத்திற்காக வீரமரணம் அடையவதை திருமண விழாக்களை கொண்டாடுவதைப் போல மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிய வேண்டும், இளம் ஆண்கள் காதலில் விழக்கூடாது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தியாகிகள் மூலம் விடுதலை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version