உலகம்

காஷ்மீர் தாக்குதல்; நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

Published

on

ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த கோழைத் தனமான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷேவாக், தவான், ரோகித் உள்ளிட்ட வீரர்கள் தங்களது கண்டனங்களையும் உயிரிழிந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை ஸ்வரா பாஸ்கர், ஹன்சிகா, சமீபத்தில் வெளியான உரி படத்தின் நாயகன் குரானா என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல மணற் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புரி கடற்கரையில் மணற் சிற்பம் ஒன்றையும் வரைந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்த கோழைத் தனமான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்புத் துறை அலட்சியம் செய்தததன் விளைவாகவே இப்படி ஒரு பெரிய கோர தாக்குதல் நடந்ததாகவும், இதற்கு நிர்மலா சீதாராமன் என்ன பதில் சொல்ல போகிறார் என்றும் சமூக வலை தளங்களில் கேள்விகள் எழுந்து வருகின்றன.

Trending

Exit mobile version