செய்திகள்

நான் கடைசியாக இருக்க வேண்டும்.. பாலியல் வன்கொடுமையில் மாணவி தற்கொலை…

Published

on

சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கோவையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு கொடுத்த பாலியல் தொல்லையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த ஆசிரியர் மீதும் பள்ளி நிறுவனர் மீதும் போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கரூரில் மேலும், ஒரு மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘பாலியல் வன்கொடுமையில் மரணமடையும் கடைசி பெண் நான்தான் இருக்க வேண்டும். என்னை இந்த முடிவு எடுக்க வச்சவர் யார் என கூற பயமாக இருக்கிறது. இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது பாதியிலேயே போகிறேன். இன்னொரு முறை இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு கெடச்சால் நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனால், முடியவில்லை

ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மனி மாமா உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க கிட்ட சொல்லாம போறேன். மன்னிசிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது’ என எழுதியுள்ளார்.அவரின் கடிதத்தை கைப்பற்றிய வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்படித்து கொதிப்படைந்த பலரும் சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version