தமிழ்நாடு

தர்ணா போராட்டம் நடத்திய ஜோதிமணியை குண்டு கட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்

Published

on

தர்ணா போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் 70 ஆண்டுகள் பழமையான காந்தி சிலையை அகற்றி விட்டு தமிழக முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளதாக ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டியுள்ளார்.

முறையான டெண்டர் விடாமல் ரகசியமாக பணி செய்து காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலையை அகற்றப்பட்டது அநியாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காந்தி சிலை தரமற்றதாக அமைக்கப்பட்டதற்கு தர்ணா போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்பியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர் என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

author avatar
seithichurul

Trending

Exit mobile version