தமிழ்நாடு

கரூர் கலெக்டர் மற்றும் எஸ்பி திடீர் மாற்றம்: இதுதான் காரணம்

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இடமாற்றம் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட தகவல்களை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சற்றுமுன் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பிரசாந்த் வடநேரே என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கரூர் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் என்பவரும் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கரூர் எஸ்பியாக சஷாங் சாய் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version