தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு!

Published

on

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிறுவப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு செய்து உள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்பட பல பிரமுகர்களை சிலைகள் உள்ளன என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் சிலை நிறுவுவதற்கு நீதிமன்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் சற்று முன்னர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணாசாலையில் ஏற்கனவே முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர்களுக்கு சிலை உள்ளது என்றும், அதே போல் தந்தை பெரியார் அவர்களுக்கும் சிலை உள்ளது என்றும், அதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் எந்த இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version