தமிழ்நாடு

நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. நாளை வீடு திரும்புகிறாரா?

Published

on

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு 8வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அவரது ரத்த அழுத்தம் மிகவும் சரியாக இருக்கிறது.

நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. நாளை வீடு திரும்புகிறாரா?

நோய் தொற்றும் குணமடைந்துள்ளது. நேற்று முதல் நாள் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.

முழுக்க முழுக்க அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது. இந்தநிலையில் நாளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவர் இனி கோபாலபுர மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று கோபாலபுர மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version