செய்திகள்

முக்கிய உடல் உறுப்புகள் செயல்படவில்லை.. கவலைக்கிடமான நிலையில் கருணாநிதி..!

Published

on

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் உடல் நலம் குன்றி கடந்த இரண்டு வாரங்களாகக் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை முக்கிய உடல் உறுப்புகள் செயல்படவில்லை, 24 மணி நேரத்திற்குப் பிறகே என்ன நிலை என்று கூற முடியும் என்று தெரிவித்து இருந்தனர்.

காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல் நிலை குறித்துச் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் உடல் நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அனைத்து மருத்துவர்களையும் தயாராக இருக்கும் படி கூறியுள்ளதாகவும் தெரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே திமுகத் தொண்டர்கள் வழக்கத்திற்கும் அதிகமான அளவில் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.

மறு பக்கம் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடையில் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version