தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் காலமானார்: திமுகவினர் இரங்கல்!

Published

on

முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் சற்று முன்னர் காலமானார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக சண்முகநாதன் என்பவர் பல ஆண்டுகளாக இருந்தார் என்பதும் கருணாநிதியின் நிழல் என்று அவர் போற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சண்முகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்முகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி உதவியாளராக சண்முகநாதன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் இருந்து வந்தார் என்பது என்பதும் அவருடைய உடன்பிறவா சகோதரராக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானதை அடுத்து திமுக தொண்டர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version