சினிமா செய்திகள்
கார்த்தியின் தேவ் திரைப்பட டீசர் வெளியீடு எப்போது!
கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக்க் வியாழக்கிழமை வெளியானது. தற்போது அந்தப் படத்தின் டீசர் எப்போது என்பது குறித்துப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தேவ் திரைப்படக் குழுவினர் வெளியிட்ட தகவலின் படி திங்கட்கிழமை (05/11/2018) டீசர் வெளியிடப்பட உள்ளது.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்திருந்த கார்த்திக்கு மீண்டும் நகரம், மாடர்ன் என வித்தியாசமான ஒரு கதைக்களம் கொண்ட படமாகத் தேவ் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தேவ் படத்தில் காதல், ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் கதாப்பாத்திரமாகவும் தேவ் இருக்கும். ராமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ரசிகராகவும் வருகிறார்.
கார்த்தியின் அப்பாவாகப் பிரகாஷ் ராஜூன், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர ஸ்மைல் சேட்டை ஆர் ஜே விக்னேஷ், அம்ருதா, வம்சி,நவரச நாயகன் கார்த்திக், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
#DevTeaser releasing tomorrow at 12:30 PM #DevTeaserTomorrow @Karthi_Offl @Rakulpreet @prakashraaj @meramyakrishnan @RajathDir @Jharrisjayaraj @PrincePictures_ @LightHouseMMLLP @RelianceEnt @lakku76 @TagoreMadhu pic.twitter.com/1OKmCZSOMS
— Vishnu Thej Putta (@VishnuThejPutta) November 4, 2018
மேலும் இந்தப் படத்தின் கதையினை ஹாரிஷ் ஜெயராஜிடம் கூறிய உடன் அவர் தன்னைக் கட்டி அனைத்துக்கண்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குலு மணாலியில் ஷுட்டிங் நடைபெறும் போது, கனமழை காரணமாகப் படக்குழுவே வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமணன் தயாரிப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா வெளியிட்டார்.தமிழ் மற்றும் தெலுங்குவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.