தமிழ்நாடு

மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: கார்த்திக் சிதம்பரம் எம்பி

Published

on

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்தது என்பது தெரிந்ததே இதனை அடுத்து ஏகே ராஜன் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்து அந்த ஆணையம் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் நீட் தேர்வுக்கு வில்க்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மசோதாவை நிறைவேற்ற போவதாக நேற்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றினாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்றும் சட்டசபையில் மசோதா நிறைவேற்றுவது தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க மட்டுமே செய்யும் என்றும் கார்த்திக் சிதம்பரம் என்று கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வது என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து செய்ய வேண்டிய பணி என்றும் மாநில அரசு மட்டும் தனியாக மசோதாவை நிறைவேற்றினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இதனை அடுத்து நீட்தேர்வு இப்போதைக்கு இல்லை என்பதும் நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராக வேண்டும் என்பதே உண்மை நிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version