சினிமா செய்திகள்

இன்கேம் இன்கேம் காவாளியை களவாடிய கார்த்தி!

Published

on

கீத கோவிந்தம் படத்தில் இடம்பெற்றிருந்த இன்கேம் இன்கேம் காவாளி பாடல் டோலிவுட்டை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது. அதிலும், ராஷ்மிகா மந்தனா எப்போது தமிழில் களமிறங்குவார் என அவருக்கு தனியாக ஒரு ரசிக ஆர்மியே இங்கே துவங்கப்பட்டது.

மேலும், விஜய் – அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு முதலில், இவர்தான் நாயகியாக நடிக்க போகிறார் என்ற வதந்தியும் வைரலாக பரவியது.

இந்நிலையில், ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னையில், நடைபெற்ற பட பூஜையின் போது, கார்த்தி – ராஷ்மிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் ஆகி வருகின்றன.

மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாயகி இல்லாமல் நடித்து வரும் கைதி கார்த்தி, தற்போது அடுத்த படத்திற்காக ராஷ்மிகா மந்தனாவை களவாடியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version