சினிமா செய்திகள்

சூர்யா பிறந்த நாளில் கார்த்தி வெளியிட்ட மாஸ் வீடியோ!

Published

on

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் உருவாக்கிய மாஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சூர்யாவின் பேட்டி மட்டும் சூர்யா நடித்த அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன.

மேலும் தனது சகோதரருக்கு அவர் தனது பிறந்தநாள் வாழ்த்தையும் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா பிறந்த நாளுக்காக நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா பிறந்தநாளை அடுத்து நேற்று சூர்யா நடித்துவரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த டைட்டில் கொண்ட வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செகண்ட்லுக் வெளியானது என்பதும், இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version