சினிமா செய்திகள்

’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே?

Published

on

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றார்கள் என்பதும் ஒரு சில திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு ஆர்யா கேரக்டரும் அவருடைய நடிப்பும் தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரால் தான் இந்த படம் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்திற்காக அவரது கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கார்த்தி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து கார்த்தி பேசிய பேசிய ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக கார்த்தி இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அதன் பின்னர்தான் ஆர்யாவை இயக்குனர் பா ரஞ்சித் தேர்வு செய்துள்ளார். தற்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் கார்த்தியின் ரசிகர்கள் ஒரு நல்ல படத்தை கார்த்தி மிஸ் செய்து விட்டாரே என்று மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையிலும் அவர் மீண்டும் ஒருமுறை பா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதை கார்த்தி மிஸ் செய்துவிட்டார் என்பதை அனைவரும் கருத்தாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version