சினிமா செய்திகள்

அட்டகாசமான ‘விருமன்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

Published

on

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விருமன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாறைமேல் ஆவேசத்துடன் வேல்கம்பை கையில் வைத்து உட்கார்ந்திருக்கும் கார்த்தியின் இந்த வசூல் போஸ்டர் பார்க்கும்போதே சூப்பராக இருப்பதாக கார்த்தியின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் பார்த்து சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version