Connect with us

விமர்சனம்

தெலுங்கு படத்தை நேரடியா தமிழில் எடுத்தால் எப்படியிருக்கும் – கார்த்தியின் சுல்தான் – விமர்சனம்!

Published

on

சென்னைக்கு ஒரே ஒரு ரவுடியாக இருக்கும் நெப்போலியனிடம் ‘தங்கள் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் ஒரு ரவுடி கும்பல் மிரட்டுகிறது. அதன் தலைவனை கொலை செய்து எங்களை விவசாயம் பாக்க உதவ வேண்டும்’ என்று கேட்டு வருகிறார்கள் ஐந்து விவசாயிகள். அதற்கு நெப்போலியனும் எப்போதாவதுதான் நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்கது. நிச்சயம் நாங்க வந்து அந்த ரவுடி கும்பலை விரட்டி அடித்து உங்களை விவசாயம் பாக்க வைப்போம். இது சத்தியம்னு ஒரு சத்தியம் பண்ணிடுறார்.

இதற்கு முன்னாள் அதாவது 1987-இல் நெப்போலியனின் நிறைமாத கற்பிணி மனைவி வீட்டில் இருக்கும் ரவுடி கும்பல்களுக்கு எல்லாம் சோறு போட்டுக்கொண்டிருக்கும் போது உங்களைப் போல என் மகன் ரவுடியாக வரமாட்டான். படிச்சு பெரிய ஆள் ஆகி உங்களையும் ரவுடித் தொழில் செய்யவிடமாட்டான் என்று வயித்தில் இருக்கும் குழந்தையிடம் சத்தியம் வாங்கிவிட்டு அந்தக் குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறார்.

பிறந்த குழந்தை (அவர் தான் கார்த்தி) அம்மா ஆசைப்படி படித்து பெரிய ஆள் ஆகி ஜப்பான் போய் ரோபோ செய்யும் கடை வைக்கும் அளவுக்கு பெரிய படிப்பு எல்லாம் படிச்சு ஊருக்கு வரும் போது நெப்போலியன் எதிர்பாராத விதமாக இறந்து போக (அம்மா சத்தியம் தான் முதல் சத்தியம்) அப்போது சென்னைக்கு புதிதாக வந்த கமிஷ்னர் இருக்கும் ரவுடிகளை சுட்டுக்கொன்று சென்னையை புனித பூமியாக மாற்ற நினைப்பதை தெரிந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நான் இவங்களை எல்லாம் நல்லவங்களா மாத்துறேன். இல்லைன்னா இவங்களை கொன்றுடுங்கனு ஒரு சத்தியம் செய்கிறார்.

இப்படி பல்வேறு சத்தியத்துக்கு மத்தியில் தன்னுடைய அப்பா செய்த முதல் சத்தியத்தை நிறைவேற்ற சேலத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்லும் கார்த்தி தன் அப்பா சத்தியம், அம்மா சத்தியம், தன்னுடைய சத்தியம், நாயகி ரஷ்மிகா மந்தனா சத்தியம் (இருக்கு பின்னாடி சொல்றேன்) இப்படி ஒரு ஆறு ஏழு சத்தியங்களை நாலு சண்டை, நாலு பாடல், கொஞ்சூண்டு காதல், ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப செண்டிமெண்ட், தேவைக்கு அதிகமாகவே விவசாயம் பற்றிய பரப்புரைன்னு கலந்து கட்டி அடித்திருக்கிறார் இந்த சுல்தான்… கதை இதுதான். புரிஞ்சா?

முழு மசாலாப்படம்… தெலுங்கு படம் போல இல்லை… அதற்கு டப் பைட் கொடுக்கும் ஒரு மசாலா பாடத்தை கொடுக்கத் திட்டமிட்டே தான் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு பிள்ளையார் சுழியே போட்டிருப்பார் போல. அது அப்படியே படமாக்கியிருக்கிறார். பாக்கும் நாம் தான் ஐயோ பாவம் என்றாகிவிடுகிறோம். அம்மா, அக்கா, தங்கச்சி, ஒட்டு மொத்த குடும்ப செண்டிமெண்ட் என்று முன்னெல்லாம் கமர்சியல் சினிமாக்களுக்கு ஒரு ஒன்லைன் இருக்கும் இல்லையா? இப்போ அது விவசாய செண்டிமெண்ட் என்று வைத்துக்கொண்டார்கள் போல. யப்பா சாமிகளா நாங்க மட்டுமில்ல விவசாயமே பாவம் தான். ப்ளீஸ் விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா திரை முழுக்க ஒரு நூறு பேர் வந்துட்டு போறாங்க. அவங்களை கையாண்ட விதம், சண்டைக்காட்சிகள் இவை மட்டும் தான் இந்தப் படத்தில் இயக்குநர் சிறப்பா பண்ணியிருக்கிறார். படத்தை இயக்கும் போதே இதை மட்டும் சரியா செய்துட்டா போதும்னு நினைத்திருப்பார் போல. அதனால் தான் அதை மட்டும் சரியா செய்துட்டார். இதேபோல கொஞ்சம் டைம் எடுத்துக்கூட மற்ற விஷயங்களிலும் கவனம் வைத்திருக்கலாம்.

கடைகுட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு விவசாயத்தை வைத்து ஒரு படம். அதில் குடும்பம், இங்கே கும்பல் அவ்வளவு தான். படம் முழுக்க கார்த்தி விவசாயம், நல்லவங்களா வாழனும்னு வந்து பேசிட்டே இருக்கிறார். இந்த பாத்திரத்தில் கார்த்தி ஒட்டவே இல்லை. சண்டை காட்சிகள், ரஷ்மிகா உடன் உருகும் சில காட்சிகளில் மட்டும் கவர்ந்துள்ளார் கார்த்தி. வழக்கம்போல நல்ல கதையை இந்த இடைவெளியை பயன்படுத்து தேர்வு செய்து நமக்கு கொடுப்பார் என கார்த்தியை நம்புவோம்.

ரஷ்மிகாவுக்கு முதல் தமிழ் படம். அவங்க இடையை காட்டிய அளவு கூட நடிப்பில் கொஞ்சம் கவனம் காட்டவில்லை. நடிப்பில் காட்டிய கவனத்தை கூட இதழ் அசைவில் காட்டவில்லை. தமிழில் படம் நடிக்கிறோம், அதுவும் கார்த்தியுடன் என்றதும் வந்துவிட்டு சென்றுவிட்டார் போல. நடிக்க வாய்ப்பு இருந்தும் அவரது முகம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார். உங்களுக்கே இவ்ளோ ரசிகரா என்ற சந்தேகம் வருகிறது.

இசை பாடல்கள் எல்லாம் விவேக் மெர்வின், பின்னணி இசை யுவன்சங்கர் ராஜா… இங்கையும் போய் நாம ஒரு தெலுங்குப்படம் மாதிரி ஒரு படம் எடுக்கப் போகிறோம்’ என்று சொல்லியிருப்பார் போல. தேவி ஸ்ரீபிரசாத் மாதிரி பின்னி எடுத்துவிட்டார்கள். காது இப்போதுவரை கொய்ங்ங்னு சொல்லுது. யுவன் நீங்களுமா என்று சொல்லும் அளவுக்கு பின்னணியை கிழித்துவிட்டார். முடியலை ரகம் தான்.

நகைச்சுவைக்காக சதீஷ், யோகி பாபுன்னு யோசிச்சுருப்பார் போல. ஒர்க் அவுட் ஆகாத சதீஷை முதல் பாதியின் தொடக்கத்தில் கழட்டிவிட்ட இயக்குநர் யோகி பாபுவை மட்டும் கடைசி வரை வைத்து நமக்கு கடும் சோதனை காட்டுவிட்டார். யோகி பாபு அடிப்பதெல்லாம் காமெடி என்று நம்புவதை எப்போதுதான் கைவிட்டு வெளியில் வருவாரோ தெரியவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல் சத்யம் சூரியனின் ஒளிப்பதிவு. அத்தனை பேரையும் ஒரு திரைக்குள் ஒரு பிரேமுக்குள் அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், காய்ஞ்சு போன அந்த கிராமமும் அழகாக அவரது கேமரா மூலம் கடத்தப்பட்டு நமக்கு வந்திருக்கு.

வழக்கமான கமர்சியல் படம் தான். யூகிக்க கூடிய காட்சிகள் தன். அதே விவசாய செண்டிமெண்ட் தான் என்றாலும் சண்டைக் காட்சி, ஆங்காங்கே சில காதல் காட்சிகள் என மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிடம் நம்மை உக்கார வைத்திருக்கிறார். டிக்கெட் வாங்கிவிட்டோமே என்று உக்காந்திருந்தாலும் அந்த விவசாயி அப்படின்ற செண்டிமெண்ட் அறுவையை பொறுத்துக்கொண்டால் நமக்கு ஒரு நல்ல தெலுங்கு பாணியிலான சண்டை படம் பார்க்கக் கிடைக்கும்…

அலோ ரஷ்மிகா என்ன சத்தியம் பண்ணுனாங்கனு போய் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லாத்தையும் சொல்லிட்டு இருப்பாங்க. அது சஸ்பெண்ஸ். ஆனால், படத்தில் சஸ்பெண்ஸ் என்பது எல்லாம் ஏதும் இல்லை. ஒரு பத்து நிமிடம் படம் பார்த்ததுமே அடுத்து என்ன அடுத்து என்னன்னு நீங்களே சொல்லிடுவிங்க. அந்த பத்து நிமிடத்திற்காக படத்தை பார்க்கணுமா என்னன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க…

author avatar
seithichurul
சினிமா1 மணி நேரம் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்2 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!