சினிமா செய்திகள்

கார்த்தியின் சர்தார்: இதுவரை இல்லாத மிகப்பெரிய பிசினஸ்!

Published

on

நடிகர் கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் அவருடைய சர்தார் திரைப்படம் பிசினஸ் ஆகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் ரூபாய் 20 கோடிக்கு பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான கார்த்தி படங்களில் டிஜிட்டல் ரிலீஸ் உரிமைக்கக அதிக தொகை கொடுக்கப்பட்டது சர்தார் படத்திற்கு தான் என்று தெரிகிறது.

ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரம் முடிந்து விட்டாலும் இந்த படம் முதலில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 45 நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடதக்கது.

கார்த்டி, ரஜிஷா விஜயன், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கும் இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version