சினிமா செய்திகள்

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

கார்த்தி நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக்கின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் 22வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் ’சர்தார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து பிஎஸ் மித்ரனின் வழக்கமான டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் தான் இதுவும் என்பது உறுதியாகி உள்ளது.

கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version