சினிமா செய்திகள்
கார்த்தியின் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் சூர்யா!
கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான திரைப்படம் கொம்பன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் முத்தையா பல பேட்டிகளில் கூறி இருந்தார். அந்த வகையில் தற்போது ‘கொம்பன் 2’ படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், தம்பி ராமையா, கோவை சரளா ஆகிய முதல் பாகத்தில் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை சூர்யாதான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் அவர் நடித்து இருப்பார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் ’கொம்பன் 2’ திரைப்படத்திலும் சூர்யா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.