தமிழ்நாடு

கைதாகிறாரா கார்த்தி சிதம்பரம்: ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தகவல்

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் கார்த்திக் சிதம்பரம் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தனது செல்வாக்கை பயன்படுத்தி 263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்காக கார்த்தி சிதம்பரத்திற்கு 50 ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை செய்தனர். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரன் என்பவரையும் கைது செய்துள்ளனர் .

இந்த நிலையில் ஆடிட்டர் பாஸ்கரனிடம் விசாரணை செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லஞ்சம் மற்றும் விசா மோசடியில் சிபிஐ அதிகாரிகளுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தற்போது வெளிநாட்டில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பியதும் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு தரப்படுகிறது.

ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version