சினிமா செய்திகள்

கர்நாடக திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்த அரசின் உத்தரவு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவினாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குறைய தொடங்கியது என்பதும் இதனை அடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்வு ஏற்பட்டு ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இயல்பு நிலை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தற்போது மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள் திறக்கப்பட்டு தற்போது தான் மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் வெளியான பின்னர் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மீண்டும் திரையரங்குகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இதேபோன்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒட்டுமொத்த திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version