இந்தியா

கர்நாடகாவில் இன்று காலை 9 மணி முதல் மது விற்பனை தொடங்கியது!

Published

on

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன.

இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு கர்நாடகாவில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிவப்பு மண்டலங்களில் சீல் வைக்கப்பட்ட இடங்கள் இல்லாமல் பிற இடங்களில் மட்டும் மொத்த விலை மது விற்பனை கூடங்கள் திறக்கப்படுகின்றன.

இதே போன்று ஆரஞ்சு, பச்சை மண்டலங்களிலும் இதே போன்று மது விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மது கடைகள் திறக்கப்படுவதால், கூட்டம் சேர வாய்ப்புகள் உள்ளதால், காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version