தமிழ்நாடு

ஆபாச வீடியோ விவகாரம்: பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

Published

on

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்த அந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதனை அடுத்து அந்த அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கோரிக்கைகள் வந்தன

இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக அமைச்சர் ஜர்கிஹோயின் மீது ஏற்பட்ட களங்கம் காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அமைச்சரின் ஆபாச வீடியோ வைரலானது அரசியல் பழிவாங்கும் செயல் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version