வணிகம்

100% வருமான வரி விலக்கு வேண்டுமா? வைரல் வீடியோ!

Published

on

கர்நாடகா மாநிலம், உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஹாண்டே, 100% வருமான வரி விலக்கு பெறுவது குறித்து நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, 2024 வருவாய் பட்ஜெட்டிற்கு பின்னர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

100% வருமான வரி விலக்கு பெற 3 எளிய படிகள்:

படி 1: வீட்டின் மாடியில் புற்களை வளருங்கள்.
படி 2: அலுவலக HR-ஐ அணுகி, எனக்கு சம்பளம் வேண்டாம் என சொல்லுங்கள்.
படி 3: சம்பளத்திற்கு பதிலாக புற்களை வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்லுங்கள்.

விவசாய வருமானத்திற்கு 100% வருமான வரி விலக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

ஸ்ரீநிதி ஹாண்டேவின் இந்த வீடியோவை, 2024-2025 பட்ஜெட்டிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இது பற்றி அவரது ப்வீடியோவிற்கு கருத்து தெரிவித்த ஒருவர் அது என்ன க்ராஸ் சாலரியா, இல்ல கிராஸ் சாலரியா கிண்டல் செய்துள்ளார்.

இதை நான் செய்தேன், எனது அலுவலக HR போலீஸ் கால் செய்து இவன் ஏதோ புல் என கூறி, 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறான். கொஞ்சம் விசாரியுங்கள் என கூறிவிட்டார் என நகசிச்சுவையாக கூறியுள்ளார்.

ஆனால், இதனை சீரியசாக எடுத்துக்கொண்ட நபர் ஒருவர் “ஸ்ரீநிதி ஹாண்டேக்கு வருமான வரி விதி தெரியவில்லை, விளை நிலங்கள் மூலம் கிடைக்கும் விவசாய வருவாய்க்கு மட்டும் தான் வரி விலக்கு கிடைக்கும்” என தெரிவித்துள்ள்ளார்.

விவசாய வருமானத்திற்கு 100% வரி விலக்கு பெறும் நிலைகள்:

குறைந்த வருமானம்: உங்கள் மொத்த விவசாய வருமானம் ஆண்டுக்கு ரூ. 5,000 க்கும் குறைவாக இருந்தால்.
மற்ற வருமானம் இல்லாதது: விவசாய நிலத்திலிருந்து வரும் வருமானம் மட்டுமே உங்கள் ஒரே வருமான மூலமாக இருந்தால், மற்றும் உங்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லாதால்.
அடிப்படை விலக்கு வரம்பு: உங்கள் மொத்த வருமானம் (விவசாய வருமானத்தைத் தவிர) அடிப்படை விலக்கு வரம்பை விட குறைவாக இருந்தால், மற்றும் உங்களுக்கு மற்ற வருமானம் மற்றும் விவசாய வருமானம் இரண்டுமே இருந்தால்.

இதில் எந்த ஒரு நிலையும் உங்களுக்குப் பொருந்தினால், முழுமையான(100%) வருமான வரி விலக்கு பெறலாம்.

seithichurul

Trending

Exit mobile version